திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (20:44 IST)

ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதியான நபர்...

தான்சானியா நாட்டில் உள்ள வடக்குப் பகுதியில் ஏராளமாக சுரங்கள் செயப்பட்டு வருகின்றன.  அங்குள்ள ஒரு சுரங்க ஒன்றில் பணியாற்றி வந்த ஏழைத் தொழிலாளி சானினியூ லைசர் என்பவர் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டபோது,  இரண்டு பெரிய ரத்தினக்கற்களை எடுத்தார்.

நீல ரத்தினக்க் கற்களாக அவை ஒன்று 9.2 கிலோ எடையும் மற்றொன்று 5.8 கிலோ எடையும் கொண்டுள்ளன. இதை அவர் அரசிடம் ஒப்படைத்தார்.

அவரது நேர்மையைப் பாராட்டிய அந்நாட்டு அரசு அவருக்கு ரூ. 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஏழைக்கூலித் தொழிலாளியாக இருந்தவர் இன்று ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.