1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 29 டிசம்பர் 2017 (11:20 IST)

82 வயது மூதாட்டியுடன் தகாத உறவு வைத்துக்கொண்ட நபர் தற்கொலை

மூதாட்டியுடன் தகாத உறவு வைத்துக்கொண்ட சம்பவம் குடும்பத்தாருக்கு தெரிய வரவே  நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இலங்கையில் கேகாலை என்ற மாவட்டத்தில் சின்னையா மோகன்(38) என்பவர் வசித்து வந்தார். இவர் வசித்து வந்த அதே தெருவில் 82 வயது மூதாட்டியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். சமீபத்தில் இந்த விஷயம் சின்னையாவின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதனையறிந்த சின்னையா சோகமாக இருந்துள்ளார்.
 
இந்நிலையில் அவர் அவமானம் தாங்காமல், நேற்று வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அவரின் உடலை கைபற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.