வேலைக்கு விண்ணப்பித்த நபரை கைது செய்த போலீஸார்: காரணம் என்ன?
அமெரிக்காவில் வேலைக்கு விண்ணப்பித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம் என பார்க்கலாம்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் கடந்த 1998 ஆம் ஆண்டு 68 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி, கடை ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த மூதட்டியின் பெயர் சோண்ட்ரா பேட்டர். இந்த கொலைக்கு காரணமானவரை போலீஸார் பல வருடங்களாக விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. சம்பவ இடத்திலிருந்த ரத்த மாதிரிகள், கை ரேகைகள் ஆகியவற்றை வைத்தும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் பேட்டர் இறப்பதற்கு முன் ஒருவர் அந்த கடைக்கு வந்து சென்றதை மட்டும் கண்டுபிடித்தனர். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில், சமீபத்தில் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார்.
பார்கட் என்பவர் ஒரு மருத்துவமனையில் செவிலியர் பணிக்காக விண்ணப்பித்து வேலை கிடைத்துள்ளது. இதனால் அவரது கை ரேகைகள், மற்றும் ஆவணங்களை மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது. அவரது கை ரேகைகள் கொலை செய்ய்ப்பட்ட இடத்தில் இருந்த கைரேகையுடன் ஒத்துப்போயுள்ளது.
மேலும் பல பரிசோதனைகள் செய்து உறுதிபடுத்தவே, பார்கட்டை போலீஸார் உடனடியாக கைது செய்தனர். 20 ஆண்டுகளுக்கு பின் வேலைக்கு விண்ணப்பம் செய்யப்பட்ட காரணத்தால் குற்றவாளி கைது செய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.