வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (20:18 IST)

10 வயதில் விரல்கள் இல்லாமல் சாதித்த சிறுமி !

அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டி ஒன்றில் கையில் விரல்கள் இல்லாத சிறுமி கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
சீனாவில் பிறந்து வளர்ந்தவரான சாரா ஹீயின்ஸ்லே 4 வருடங்களாக குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்துவருகிறார்.
 
தற்போது 10 வயதாகும் சாராவிற்கு பிறக்கும் போதே கையில் மணிக்கட்டுக்குக்கீழே விரல்கள் இல்லை என்பது நமக்குத்தான் சோகமான விஷயம். ஆனால் தன்மீதுள்ள நம்பிக்கையால் தானே எழுதவும், வரையவும் கற்றுக்கொண்டார்.
 
இப்போது அவர் 3 வது வகுப்பு படித்துவருகிறார்.இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற தேசிய அளவிலான கையெழுத்துப்போட்டியில் சாரா கலந்துகொண்டார்.
 
இதில் சாரா முதல்பரிசு வென்றார். தற்போது அவருக்கு பலரும் பாராட்டுக்கள் கூறிவருகின்றனர்.