’’தேர்தல் வெற்றியில் அப்பா விரைவில் குணமடைவார் ’’- சின்ன கேப்டன் உருக்கம்

vijayprabhakaran
Last Modified வியாழன், 11 ஏப்ரல் 2019 (16:54 IST)
அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து  வருகின்றனர். அதிமுக மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் தேமுதிக, பாமக,பாஜக போன்ற முக்கிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  தற்போது பிரசாரம் மேற்கொண்டு வரும் தேமுதிக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சமிக்கு ஆதரவாக விஜயபிரபாகரன் தே.கல்லுப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியதாவது :
 
விருதுநகர் எங்களுடைய பூர்வீகமான தொகுதி. அதற்காகவே  கேப்டன் இந்தொகுதியை கேட்டு பெற்றுள்ளார். அப்பா சீக்கிரம் குணமடைவது உங்களிடம்தான் இருக்கிறது. அப்பா பிரசாரம் செய்த அதே வாகனத்தில் தான் நான் பிரசாரன் செய்கிறேன்.
 
அதனால் நீங்கள்தான் தேமுதிகவை வெற்றியடையச் செய்ய வேண்டும்.என்று பேசியவர் திமுகவை விமர்சனம் செய்து அவர்கள் மீது குற்றம்சாட்டினார்.


இதில் மேலும் படிக்கவும் :