வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (07:45 IST)

800 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் தீவிபத்து: அதிர்ச்சியில் பாரீஸ் மக்கள்

12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாரீஸ் நோட்ரே-டேம் சர்ச்சில் நேற்று மாலை ஏற்பட்ட தீவிபத்தால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
 
800 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த சர்ச்சில் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. பராமரிப்பு பணியின்போது ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நல்லவேளையாக இந்த தீவிபத்தின்போது சர்ச்சினுள் யாரும் இல்லை என்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
 
இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட ஜுவாலைகளை பாரீஸ் நகர் முழுவதிலும் இருந்து பார்க்க முடிந்தது. பொதுமக்கள் இந்த தீயை கவலையுடன் பார்த்து வந்தனர். இந்த தீ விபத்து குறித்து கேள்விப்பட்டவுடன் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். சர்ச்சின் முக்கிய பாகங்கள் தீயில் இருந்து காப்பாற்றப்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
வரலாற்று சிறப்புமிக்க இந்த சர்ச்சுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ஒரு கோடி சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதுண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்து குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.