புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 11 அக்டோபர் 2018 (20:16 IST)

படத்தில் வருவது போன்று பல மனிதர்களைக் காப்பாற்றிய பெண் பலி....

மின்சார கோளாறு காரணமாக இன்று நள்ளிரவு 2 மணியளவில் டெல்லி அருகே உள்ள குர்கான் நகரில் 10 மாடி கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட  மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு தீ பலபக்கங்களில்  பரவியது.
இந்த அசம்பாவித்தை எதிர்பாராத மக்கள் பலர் அங்கும் இங்கும் அல்லாடி கொண்டிருந்தனர்.
 
இதனையடுத்து 5 ஆவடு மாடியில் தூங்கிக்கொண்டிருந்த சுவாதி என்பவர் இந்த தீ விபத்தை அறிந்து கொண்டு உடனடியாக துரிதமாக செயல்பட்டு அருகில் இருபவர்களுக்கு தகவல் சொல்ல அவர்கள் வீட்டுக்  கதவை தட்டி அவர்களை எழுப்பி மொட்டை மாடிப்பகுதிக்கு சென்று தப்பிக்குமாறு கூறியுள்ளார். அதனைக்கேட்டு அவர்களுடன்  அவரது கணவரும் குழந்தையும்கூட மொட்டைமாடிக்கு சென்று உயிர் தப்பினர்.
 
மற்றவர்களை காப்பாற்றுவதற்காக ஓடிஓடி சென்று தகவல் கூறியவர் வெகுநேரமாகியும் வரவில்லை.
 
இந்நிலையில் தீயணைப்பு துறையினரும் வந்துவிட்டனர்.பிறகு தீயை முழுவதுமாக அனைத்து விட்டு சுவாதியை தேடும் போது அவர் 10வது மாடியில் உடல் கருகிய நிலையில் இருந்துள்ளார்.
 
எல்லோரும் அசம்பாவிதம் இன்றி தப்பிக்க சமயோஜிதமாக உதவி செய்த  சுவாதி மட்டும் தீயில் கருகி இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.