திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2022 (16:33 IST)

இலங்கை முன்னாள் அதிபரை கொலை செய்ய முயற்சி: 8 தமிழர்களுக்கு பொதுமன்னிப்பு!

jail
இலங்கை முன்னாள் பிரதமரை கொலை செய்ய முயற்சித்த 8 தமிழர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா என்பவரை கொலை செய்ய முயன்றதாக எட்டு தமிழர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்
 
சந்திரிகாவை கொலை செய்ய முயன்ற வழக்கு மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்ட குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எட்டு தமிழர்கள் கடந்த சில ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்
 
இந்த நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியை அடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி உள்ளதாக உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து விரைவில் 8 தமிழர்களும் சிறையிலிருந்து விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva