திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 மே 2023 (17:28 IST)

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் இன்ஜினியர் உள்பட 8 பேர் பலி

america
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் இன்ஜினியர் உள்பட 8 பேர் பலியாகினர்.

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. சமீபகாலமாகவே இங்கு துப்பாக்கிச்சூடு நடந்து வருவது அதிகரித்துள்ளது.

சில நாட்களுக்கு முன், பள்ளிக்கூடம், கல்லூரி வளாகம், கேளிக்கை விடுதிகளில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்த நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் டெல்லெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மாலையில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

இதில், மவுரிஹோ ஹர்சியா(33) என்ற  நபர் நடத்திய , இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் மவுரியா ஹர்சியாவை சுட்டுக் கொன்றனர்.

ஹர்சியா நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சரோர் நகர் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா தடிகொண்டா (27) என்ற பெண் என்ஜினியர் பலியானதாக தகவல் வெளியாகிறது. இவர் நீதிபதியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.