ஒரே நாளில் 700 விமானங்கள் ரத்து: என்ன ஆச்சு இந்த விமான நிறுவனத்திற்கு?
ஜெர்மனி நாட்டின் பிரபல விமான நிறுவனமான லுப்தான்சா என்ற விமான நிறுவனத்தின் விமானங்கள் இன்று ஒரே நாளில் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த விமானத்தின் ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் விமானங்களை இயக்க இயலாமல் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது
ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான லுப்தான்சா நிறுவனம் ஜெர்மனியிலிருந்து உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் அதிகப்படியான விமானங்களை இயக்கி வருகிறது
இந்த நிலையில் திடீரென இந்நிறுவனத்தின் நிர்வாக ஊழியர்கள் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இந்த அறிவிப்பு காரணமாக மொத்தம் 700 விமானங்களை அந்நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. குறிப்பாக பிராங்பர்ட் விமான நிலையத்தில் மட்டும் 400 விமானங்களும், முனிச் விமான நிலையத்தில் இருந்து 250 விமானனங்களும், மற்ற சிறிய பெரிய நகரங்களில் 50 விமானங்கள் வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது
இந்த நிலையில் இந்த நிறுவனம் தனது ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது