புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2020 (08:15 IST)

சீனாவில் கொரோனா 2வது அலை: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 210ஆக உயர்ந்ததால் பரபரப்பு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் கொரோனா வைரஸ் முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் வூகான் மாகாணத்தில் மிக வேகமாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ், சீனா முழுவதும் ஒரு சில வாரங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது 
 
அதுமட்டுமின்றி சீனாவில் இருந்து வெளிநாடு சென்றவர்களால் கிட்டத்தட்ட 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி இன்று கொரோனா வைரஸ் காரணமாக லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவில் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது சமீபத்தில் இயல்பு நிலை திரும்பியது. அங்கு கடைகள் தியேட்டர் உள்பட அனைத்தும் திறக்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடங்கினார் 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டது. இது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை என சீன விஞ்ஞானிகள் சந்தேகப்பட்டு பரிசோதனை செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடு என உயர்ந்து கொண்டே செல்கிறது 
 
சீனாவில் நேற்று மட்டும் மேலும் 40 பேருக்கு கொரனோ வைரஸ் தொற்று பரவியிருப்பதாகவும் இதனை அடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 210ஆக உயர்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
நேற்று முன் தினம் 49 பேர்களுக்கும் நேற்று 40 பேருக்கும் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளதால் சீனாவில் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது