மியாமி நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 159 பேரை காணவில்லை
அமெரிக்காவின் மியாமி நகரில் 12 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 150 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும் கட்டடம் இடிந்த விழுந்த போது எத்தனை பேர் அதில் இருந்தனர் என்ற தகவலும் தெரியவில்லை. இடிபாடிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மியாமி டேட் கவுன்டியின் மேயர், நம்பிக்கையுடன் சிக்கியுள்ளவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடி வருவதாக தெரிவித்தார். கட்டடம் இடிந்து விழுந்த காரணத்தை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு என்று தெரிவித்துள்ள ஃபுளோரிடா மாகாண ஆளுநர், தற்சமயம் சிக்கியுள்ளவர்களை மீட்பதே முதன்மை பணி என்று தெரிவித்துள்ளார்.