திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2024 (09:50 IST)

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது.! இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் வழக்கம் போல் விசைப்படகில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இந்த மீனவர்கள் 11 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். மேலும், விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
 
கைது செய்யப்பட்ட மீனவா்கள் 11 பேரும் காங்கேசன்துறைக்கு நேற்று நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்டு, யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்று காலை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் விசாரணைக்காக  ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக  தமிழக மீனவர்கள் மீது மூன்று முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.