1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (22:48 IST)

கொரொனா அறிகுறியுடன் இருந்தால் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்- WHO அறிவுறுத்தல்

corono
சீனாவில் இருந்து கொரொனா முதல் அலை பரவியது மாதிரி தற்போது பிஎஃப்-7 என்ற உருமாறிய வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது.
 

சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இத்தொற்று பரவி வருகிறது.

இந்த நிலையில், கொரொனா தொற்றுப் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், உரிய பாதுகாப்பு  நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அனைத்து நாடுகளிலும் எச்சரிக்கை  விடுத்துள்ளது.

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் கொரொனா அறிகுறியுடன் இருந்தால் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஒருவேளை அறிகுறி இல்லையென்றால்  5 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் எனவும், ஆன்டிஜென் பரிசோதனை செய்யலாம் என தெரிவித்துள்ளது.