புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 10 ஜூலை 2020 (07:40 IST)

1.23 கோடியாக உயர்ந்தது உலக கொரோனா பாதிப்பு: இந்தியா தொடர்ந்து 3வது இடம்

1.23 கோடியாக உயர்ந்தது உலக கொரோனா பாதிப்பு
உலக நாடுகளில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,23,78,777 ஆக அதிகரித்திருக்கிறது என்பதும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,56,585 ஆக உள்ளது என்பதும், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 71,82,394 ஆகவும் உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,219,999 ஆக உயர்ந்துள்ளது என்பதும் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,759,103 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 25,803 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 479 பேர் மரணம் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவை அடுத்து ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,219,999 ஆக உயர்ந்துள்ளது என்பதும், பெருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 316,448 ஆக உயர்ந்துள்ளது என்பதும், சிலி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 306,216 ஆக உயர்ந்துள்ளது என்பதும், ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300,136 ஆக உயர்ந்துள்ளது என்பதும், இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 287,621 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மெக்சிகோவில் நேற்று ஒரேநாளில் கொரோனாவால் 782 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேபோல் தென்னாப்பிரிக்காவில் ஒரே நாளில் 13,674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 118 பேர் பலியானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.