திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (23:02 IST)

பாகிஸ்தானுக்கு கடன் வழங்க ஐ.எம்.எஃப் ஒப்புதல்

Minister of Pakistan
பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், தற்போது சர்பாஸ் சாரிஃப் புதிய பதவியேற்றார்.

இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு, பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்த நிலையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் குறைந்ததால் அங்கு பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியுள்ளது.

இந்த   நிலையில், அங்குள்ள  தொழிற்சாலைகளிலும் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே  நாட்டில் பொருளாதார நிலைமைச் சமாளிக்கும் வகையில் பிரதமர் ஷபாஸ் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் எனும் ஐஎம் எஃப் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தியது. அதில், பாகிஸ்தானுக்கு  1.17 பில்லியன் டாலர்களை கடன் வழங்க ஒப்புதல் அறிவித்துள்ளது.