வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

வாழைப்பூ கூட்டு செய்ய....!

தேவையானவை:
 
வாழைப் பூ - 6 மடல்
துவரம் பருப்பு - 1/2 கப்
சின்ன வெங்காய்ம் - 8
தக்காளி - 1
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கடுகு, உளுந்து, கறிவெப்பிலை - தாளிக்க
எண்ணெய் - 2 ஸ்பூன் உப்பு
செய்முறை:
 
வாழைப்பூவை நரம்பை நீக்கி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். நறுக்கிய பீவை மோரில் போட்டு வைப்பதால் அவை கருத்துவிடாமல் இருக்கும். பூண்டு, சீரகம், சோம்பு, தேங்காய் துருவலை விழுதாக அரைத்து  கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து கருவேப்பிலை தாளித்து, பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் பொடி, உப்பு  சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் வாழைப்பூ, பருப்பு சேர்த்து இந்த கலவையுடன், தேங்காய் விழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம்  கொதிக்கவிடவும். சுவையான வாழைப்பூ கூட்டு தயார்.