பைனாப்பிள் ரசம்

பைனாப்பிள் ரசம்


Sasikala|
தேவையானவை: 
 
பைனாப்பிள் - 4 துண்டுகள்
புளி ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு
தண்ணீர் - 250 மில்லி
ரசப் பொடி - ஒரு டீஸ்பூன்
மிளகு - சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
வேக வைத்த பருப்பு -  ஒரு கப்
கடுகு - கால் டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லி - தேவையான அளவு

 
 
செய்முறை:
 
புளியை  தண்ணீர் விட்டுக் கரைத்து, ரசப் பொடி, உப்பு சேர்த்து, பைனாப்பிளை பொடியாக நறுக்கிப் போட்டு, நன்றாக கொதிக்க விடவும். 
 
வேக வைத்த பருப்பை நன்கு மசித்து கரைத்து விட்டு... கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு-சீரகத்தூள் தாளித்து, சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து இறக்கவும். 


இதில் மேலும் படிக்கவும் :