1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

தக்காளி கிரீம் சூப் செய்ய !!

தேவையான பொருட்கள்: 
 
தக்காளி - 3
வெங்காயம் - ஒன்று
செலரி - சிறிதளவு
நறுக்கிய குடமிளகாய் - சிறிதளவு
பூண்டு - ஒரு பல்
பாஸில் இலை, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள், கிரீம், பிரெட் துண்டு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
 
கடாயில் சிறிதளவு வெண்ணெயை போட்டு, உருகியதும் சீரகம், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு, செலரி, குடமிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை ஒன்றன்  பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

இதில் பாஸில் இலை, மிளகுத்தூள் சேர்த்து, கொதி வந்தவுடன் இறக்கி ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி  எடுக்கவும்.
 
மற்றொரு கடாயில் மீதமுள்ள வெண்ணெயை போட்டு, உருகியதும் மைதா சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, வடிகட்டி வைத்துள்ள சாறுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி, கிரீம் மற்றும் வறுத்த பிரெட் துண்டு சேர்த்துப் பரிமாறவும்.