Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த காளான் குழம்பு செய்ய....!

Updated: வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (18:14 IST)
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
 
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:
 
காய்ந்த மிளகாய் - 2
தனியா - 3 மேஜைக்கரண்டி
சீரகம் - 1 மேஜைக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிதளவு
இஞ்சி - 1 இன்ச் அளவு
பூண்டு - 5 பல்
செய்முறை:
 
முதலில் காளானை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவேண்டும். வெங்காயம், தக்காளியையும் நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் லேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பின்னர் கொத்தமல்லி  சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
 
தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை தனியாக அரைத்து கொள்ளவும். காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் காளான் மற்றும் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு இவற்றுடன் 200 மி.லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
 
மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி  விடவும். சுவையான காளான் குழம்பு தயார்.

எல்லாம் காட்டு

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments