வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பூண்டு குழம்பு செய்ய...!

தேவையான பொருள்கள்:
 
பூண்டு - மூன்று முழுவதும்
கடுகு - கொஞ்சம்
சிறிய வெங்காயம் - இரண்டு கப்
தக்காளி - நான்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தனியா தூள் - இரண்டு டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெந்தயம் - சிறிதளவு
புளி - எலுமிச்சை அளவு
செய்முறை:
 
எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் வெந்தயம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பூண்டு முழுதாக சேர்க்கவும் வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
 
மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை அனைத்தும் போட்டு நன்கு வதக்கவும் பிறகு புளி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பாக அரை டீஸ்பூன் மிளகு தூள், கொத்தமல்லி போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.
 
சுவையான உடலுக்கு ஆரோக்கியம் தரும் பூண்டு குழம்பு தயார்.