Daily Horoscope
✕

சுவையில் அசத்தலான ஜீரா புலாவ் செய்ய !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 5 மார்ச் 2021 (16:38 IST)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
சீரகம் - 2 மேசைக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1

செய்முறை:
 
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். பட்டை பொன்னிறமானதும் சீரகம் போடவும்.
 
சீரகம் பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சை வானசை போனதும் ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூடவும்.
 
நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான ஜீரா புலாவ் தயார்.

எல்லாம் காட்டு

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

அடுத்த கட்டுரையில்
Show comments