ஆரோக்கியமான கறிவேப்பிலை குழம்பு செய்ய...!
மிகவும் எளிதான சுவையானது இந்த கறிவேப்பிலை குழம்பு. உடலுக்கு மிகவும் ஏற்றது. சளி இருமல் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. தலைமுடி கருமையாகவும், செழுமையாகவும் வளர உதவும்.
தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை - 3/4 கப், பூண்டு - 10 பல், புளி - நெல்லிக்காய் அளவு.
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - 4
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
தனியா - 1/ 4 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1 ஸ்பூன், வெந்தயம் - 1/4 ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன், நல்ல எண்ணெய் - தேவைக்கு ஏற்ப.
செய்முறை:
முதலில் வறுத்து அரைக்க வேண்டியவற்றை வறுத்து அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பூண்டு, கறிவேப்பிலையை சுத்தம் செய்து வைக்கவும். பின் கடாயில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்து, பூண்டையும் சேர்த்து வதக்கவும். பின் இதனுடன் புளி கரைசல், அரைத்த விழுது சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.. மணமணக்க கறிவேப்பிலை குழம்பு தயார். சூடான சாதத்துடன் பரிமாறவும்.