Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான தக்காளி குருமா செய்ய...!!

Written By Sasikala
Updated: செவ்வாய், 31 மார்ச் 2020 (13:30 IST)
மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி 
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
சின்ன வெங்காயம் - 4
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
 
தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும். தேங்காய், சின்ன வெங்காயம் இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு எண்ணையை ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, இஞ்சி  பூண்டு கலவையை சேர்த்து வதக்கவும்.
 
பச்சை வாடை போனதும் தக்காளியை போட்டு வதக்கவும். நன்கு சுருள வதங்கியதும் மிளகாய் பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும். தக்காளி தண்ணீர் விடுவதால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. தேவைப்பட்டால் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
 
இறுதியில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான தக்காளி குருமா ரெடி. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம்  எல்லாவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments