Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பன்னீர் சமோசா செய்ய !!

Written By Sasikala
Updated: திங்கள், 30 மே 2022 (14:00 IST)
தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்
உப்பு, தண்ணீர் - தேவைக்கேற்ப
நெய் - 1 டீஸ்பூன்
பன்னீர் - 50 கிராம்
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப,
சாட் மசாலா, உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப



செய்முறை:

மைதா மாவுடன் உப்பு, நெய் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். பன்னீரை துருவி அதன் மேல் உப்பு, சாட் மசாலா, மிளகாய் தூள் தூவி நன்றாக கலந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள மைதா மாவிலிருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரியாகத் திரட்டி மத்தியில் சிறிது பன்னீர் மசாலாவை வைத்து சமோசா வடிவத்தில் மடக்கி ஓரங்களில் சிறிது தண்ணீர் கொண்டு ஒட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்து எடுக்கவும். சுவை மிகுந்த பன்னீர் சமோசா தயார்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments