அட்டகாசமான சுவையில் பிரெஞ்சு ப்ரைஸ் செய்ய !!

Written By Sasikala
Updated: சனி, 28 நவம்பர் 2020 (12:19 IST)
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
 
* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும். அப்படி வெட்டும் போது உருளைக்கிழங்கு மிகவும் தடிமனாகவோ  அல்லது மிகவும் மெல்லியதாகவோ இருக்காமல் பார்த்து வெட்டுங்கள்.
 
* பின் வெட்டிய உருளைக்கிழங்கை நீரில் ஒருமுறை அலசி விட்டு, குளிர்ந்த நீரில் 10-15 நிமிடம் ஊறவையுங்கள். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,  அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
 
* எண்ணெய் நன்கு சூடானதும், நெருப்பைக் குறைத்துவிட்டு, முதலில் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு நன்கு மொறுமொறுப்பாகும் வரை பொரித்து எடுத்துக்  கொள்ளவும்.
 
* பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளை டிஷ்யூ பேப்பரின் மேல் வைத்து, குளிர வைக்கவும். பின் அதன் மேல் உப்பு தூவி ஒருமுறை பிரட்டி விட்டால்,  சுவையான பிரெஞ்சு ப்ரைஸ் தயார். இதை தக்காளி சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
 
குறிப்புகள்:
 
* சரியான பிரெஞ்சு பிரைஸ் தயாரிக்க வேண்டுமானால், வெட்டிய உருளைக்கிழங்கை ஐஸ் கட்டி நீரில் போட்டு 20-30 நிமிடம் ஊறவைத்து பயன்படுத்தலாம். பிறகு டிஷ்யூ பேப்பரில் போட்டு நன்கு உலர்த்திவிட்டு, 2 முறையாக பொரித்து எடுக்கலாம்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments