ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவை மிகுந்த தேங்காய் பால் பிரிஞ்சி செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பாஸ்மதி அரிசி - 2 கப்
தேங்காயின் முதல் கெட்டி பால் - 1 கப்
2 ஆம் பால் - 2 1/2 கப்
பச்சைமிளகாய் - 4
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
லவங்கம் - 6
ஏலக்காய் - 4
மிளகு - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
உப்பு - தேவைக்கு
முந்திரி - தேவைக்கு ஏற்ப

செய்முறை:
 
அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து வடித்து உலர்த்தவும். அடிகனமான ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து, சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, மிளகு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். 
 
நன்கு வதங்கியதும் இரண்டாம் தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அரிசி, உப்பு போடவும். மிதமான தீயில் வேகவிட்டு முக்கால் பதத்திற்கு சாதம்  வெந்ததும், முதல் பால், சேர்த்து மேலும் 2 நிமிடம் வேகவைத்து மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும்.

பிறகு உதிரி உதிரியாக வெந்ததும் இறக்கி நெய்யில் வறுத்த முந்திரியை நெய்யுடன் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும். சுவை மிகுந்த தேங்காய் பால் பிரிஞ்சி தயார்.