வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

சேமியா கிச்சடி செய்ய வேண்டுமா...!!

தேவையான பொருட்கள்:
 
சேமியா - ஒரு கப்
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி - கால் கப் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1
எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன் (மூன்றும் கலந்தது) 
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: 
 
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, சேமியாவை வறுத்துக் கொள்ளவும். நன்கு கழுவி நறுக்கிய காய்கறிகளை 5 நிமிடம் வேகவிட்டு  எடுத்துக் கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம்,  இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வேக வைத்த காய்கறிகள் சேர்த்துக் கிளறவும். பிறகு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க  விடவும்.
 
பிறகு, வறுத்த சேமியாவை அதில் சேர்த்துக் கிளறி இறக்கவும். இறக்குவதற்கு முன் நெய், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கலந்து கொள்ள  வேண்டும். சுவையான கிச்சடி சாப்பிட தயார்.