Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான புதினா புலாவ் செய்வது எப்படி...?

Written By Sasikala
Updated: வியாழன், 19 டிசம்பர் 2019 (13:14 IST)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - 1/2
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:
 
புதினா - 1 கட்டு
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1/2
பச்சை மிளகாய் - 1

செய்முறை:
 
முதலில் அரிசியை தண்ணீரில் ஒரு 20 நிமிடங்கள் நன்றாக ஊறவைத்து, பின்பு சுத்தமாக கழுவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்பு மிக்ஸியில் புதினா, தேங்காய் துருவல், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு பேஸ்ட்டு போல் நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி  பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அடுத்து வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பின் உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் அரிசியை சேர்த்து 3  நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். இறுதியில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 10 நிமிடம் வேகவைத்து இறக்கினால், சுவையான  புதினா புலாவ் தயார்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments