Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியம் தரும் இஞ்சி குழம்பு செய்ய...!!

Written By Sasikala
Updated: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (12:04 IST)
தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்
வெந்தய தூள் அரை டேபிள் ஸ்பூன்
ஆயில் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு வத்தல் - 3
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 3 கொத்து
உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:
 
முதலில் தேங்காயை துருவி வைத்து கொள்ளுங்கள். இஞ்சியை நன்றாக தோல் சீவி சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நறுக்கிய இஞ்சி மற்றும் தேங்காயை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். வறுக்கும் பொழுது எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும்.
 
வறுத்த தேங்காய் மற்றும் இஞ்சியை சூடு ஆறும் வரை வைத்திருந்து அதன் பின் கூடவே புளி, பூண்டு, வத்தல் மிளகாய் பொடி , மல்லி தூள், ஜீரகம், வெந்தய தூள் சேர்த்து நன்றாக மை போல அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
 
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணையை ஊற்றி சூடானதும் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் வத்தல் மிளகாயை  போட்டு லேசாக கிளறி அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் இஞ்சி விழுது மசாலா கலவையை வாணலியில் சேர்த்து கூடவே சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக  கிளறி விடுங்கள்.
 
தேவைக்கு உப்பை சேர்த்து கொள்ளுங்கள். இந்த கலவை கொதித்ததும் இஞ்சி குழம்பு ரெடி. இஞ்சியை வறுத்து அரைத்து எடுப்பதால் கொதித்தவுடன் இஞ்சி குழம்பு கொதித்தவுடன் குழம்பு தயார்.
 
பலன்:
 
இந்த இஞ்சி குழம்பு வறுத்து செய்வதால் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும். மேலும் பசி எடுக்காமல் இருப்பவர்கள் இந்த இஞ்சி குழம்பு சேர்த்து வந்தால் நன்கு  பசி எடுக்கும். மேலும் செரிமானமும் நன்கு நடைபெறும்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments