Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியம் தரும் பாகற்காய் கார குழம்பு!

Written By Sasikala
Updated: வெள்ளி, 12 மே 2017 (13:03 IST)
தேவையான பொருட்கள்: 
 
பாகற்காய் - 300 கிராம் 
வெந்தயம் - 1/2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது) 
சின்னவெங்காயம் - 200 கிராம் (நறுக்கியது) 
நல்லெண்ணெய் - 50மி.லி. 
தக்காளி - 2 
புளி - எலுமிச்சைப்பழ அளவு 
உப்பு - தேவைக்கு 
பூண்டு - 2 டீஸ்பூன் (நறுக்கியது) 
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
தனியாத்தூள் - 1½ டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
தேங்காய்த்துருவல் - 100 கிராம்

 
செய்முறை:
 
முற்றாத பாகற்காயின் விதைகளை நீக்கி பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும். சீரகம்,  தேங்காய்த்துருவல், தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 
 
கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். நன்கு வதங்கியதும்  வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து கிளறவும்.  பின் அரைத்த விழுது, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். 
 
குழம்பு முக்கால் பதத்திற்கு வந்ததும், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments