Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை போக்க வீட்டு குறிப்புகள்!

Written By Sasikala
Updated: வெள்ளி, 12 மே 2017 (11:53 IST)
 
எலுமிச்சை சாறு மற்றும் தேன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம்  ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.
 
கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் இந்த ஃபேஸ் பேக், வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலிவை  அதிகரிக்கும். அதற்கு 4 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட்  செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
 
பேக்கிங் சோடா இந்த முறை கூட முகத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில்  கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
 
ஓட்ஸ் இது ஒரு நேச்சுரல் ஸ்கரப்பர். இந்த ஸ்கரப் செய்வதற்கு சிறிது ஓட்ஸ் உடன், பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி  மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின் முகத்தைக் கழுவிய பிறகு, வைட்டமின் ஈ ஆயிலை முகத்தில் தடவி மசாஜ்  செய்து விட வேண்டும்.
 
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு எலுமிச்சை ஓரு சிறப்பான ப்ளீச்சிங் தன்மை வாய்ந்த பொருள். அந்த எலுமிச்சையின் சாற்றில்  சிறிது உப்பு சேர்த்து கலந்து, குளிக்கும் போது இந்த கலவையைக் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த  நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமைகள் அகலும்.
 
வெள்ளரிக்காய் சரும கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற  வைத்து, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும்  நீங்கும்.
 
கற்றாழை ஜெல் கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால், சருமத்தில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் நீங்குவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து,  பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments