1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

எந்த வகை கொண்டைக்கடலை உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது தெரியுமா....?

பழுப்பும், கறுப்பும் கலந்த நிறத்தில் சிறியதாக இருந்தாலும், புரதம் நிரம்பியது. முதிர்ந்த கறுப்பு கொண்டைக்கடலையை, ஊறவைத்த பின்னரே பயன்படுத்த  வேண்டும். 

உடற்பயிற்சிக்கு முன் ஊறவைத்த கொண்டைக்கடலையை சாப்பிடுவதால், உடல் பலம் பெறும். தசை உறுதிக்கு நல்லது. தினசரி, கொண்டைக்கடலை உண்பதால் மலச்சிக்கல், குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும், குணமாகி விடும்.
 
கொண்டைக்கடலையை தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
 
இதய நோய் மற்றும் செரிமான நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது. கறுப்பு கொண்டைக் கடலையில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக செரிமானிக்கப் படுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து, இன்சுலின் எதிர்ப்புக்கு பங்களிக்கிறது. இதனால், நீரிழிவு நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது.
 
இரும்புச்சத்து நிறைந்த கறுப்பு கொண்டைக்கடலை, ரத்த சோகையைத் தடுக்கவும், உடனடி ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால், கர்ப்பிணி, பாலூட்டும் பெண்கள் மற்றும் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நன்மை பயக்கும்.
 
பெரும்பாலும், மாங்கனீசு குறைபாடு முடி வளர்ச்சியை தாமதப்படுத்தும். கொண்டைக்கடலையில் உள்ள மாங்கனீசு முடிவளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு, அதில்,  புரதம் நிறைந்திருப்பதால், முடி உதிர்வையும் குறைக்கும்.
 
கொண்டக்கடலையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அவை இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பைத் தடுத்து, உடலில்  எனர்ஜியை அதிகரிக்கும்.