1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சரும பராமரிப்பில் பருக்களை போக்கும் எளிய அழகு குறிப்புகள் !!

சரும பராமரிப்பு 1: 
 
தேவையான பொருட்கள்: ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தேன்
 
பயன்படுத்தும் முறை: ஒரு பெளலில் 1/2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் 1 டேபிள் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி சில  நிமிடங்கள் மசாஜ் செய்து விடுங்கள். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே நீங்கள் பருக்கள்  அற்ற முகத்தை பெறலாம்.

சரும பராமரிப்பு 2:
 
தேவையான பொருட்கள்: முட்டையின் வெள்ளை கரு மற்றும் லெமன்
 
பயன்படுத்தும் முறை: ஒரு பெளலில் 1 டேபிள் ஸ்பூன் அளவுக்கு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து அதனுடன் 1/2 டேபிள் ஸ்பூன் லெமன்  ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக அடித்து கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். ஓரிரு நாட்களில்  பருக்களின் வீரியம் குறைந்து மறைந்து விடும்.
 
சரும பராமரிப்பு 3:
 
தேவையான பொருட்கள்: க்ரீன் டீ பேக் மற்றும் தேன்
 
க்ரீன் டீ - தேன்: க்ரீன் டீ பேக் நமது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. தேன் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கிறது. பயன்படுத்தும் முறை க்ரீன் டீ பேக்கை வெட்டி அதிலுள்ள பொடியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அதை ஒரு பெளலில் எடுத்து 1-2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
 
முகத்தை நன்றாகக் கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை அப்ளே செய்து 5-10 நிமிடங்கள் இருங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை  என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.