1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

வீடு கட்டும்போது தலைவாசல் வரக்கூடாத இடங்கள் எவை...?

கிழக்கு தலைவாசல் கொண்ட இல்லத்தில் தலைவாசல் வடகிழக்குத் திசையை நோக்கி இருக்கும்படி கட்டினால் செல்வம் வளரும். தென்கிழக்கு திசை நோக்கி  வாசல் அமைத்தால் பல சிக்கல்கள் உண்டாகும். நெருப்பால் அச்சம், கடன், ரோகங்கள் போன்றவை ஏற்படும்.

தெற்குத் திசையில் தலைவாசல் இருக்கும்போது, அதற்கு நேராக வடக்கில் ஒரு வாயில் இருக்க வேண்டும். தெற்கில் மட்டும் ஒரு வாயில் அமைக்கக் கூடாது. மேற்கு வாயில் வைக்கக் கூடாது.
 
மேற்கு நோக்கிய இல்லத்தின் தலைவாசல் சரியாக மேற்கு நோக்கி அமைக்க வேண்டும். தென்மேற்கு நோக்கியோ, வடமேற்கு நோக்கியோ இருக்கக் கூடாது. தீய பலன்கள் கொடுக்கும்.
 
வடக்கு திசை கொண்ட கட்டடங்களில் தலைவாசல் அமைக்குபோது கட்டடத்திற்கு வடபுறம் நின்று மேற்கிலிருந்து கிழக்காக 9 பாகம் செய்ய வேண்டும். முன்பு  கூறியது போன்று சந்திரன் பகுதியிலும், குரு, புதன், சுக்கிரன் பகுதியிலும் தலைவாசல் அமைக்க வேண்டும்.
 
கட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்:
 
வடக்கு பார்த்த கட்டடத்திற்கு வடக்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.
 
கிழக்கு பார்த்த கட்டிடத்திற்கு கிழக்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.
 
மேற்கு பார்த்த கட்டிடத்திற்கு மேற்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.
 
தெற்கு பார்த்த கட்டிடத்திற்கு தெற்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்ககூடாது.
 
மேலும் தலைவாசல் மூன்று, ஐந்து, ஏழு… என்ற எண்ணிக்கையில் வருமாறு அமைப்பது சிறந்ததல்ல.