புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By

வாஸ்து கோட்பாடுகளின்படி கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது...?

வாஸ்து கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் ஒரு வீடு அதில் வசிப்பவருக்கு மன அமைதி மற்றும் முன்னேற்றத்துடன் கூடிய ஆரோக்கியமான, தடைகளற்ற வீட்டை வழங்குகிறது. குளியல் அறை என்பது ஒரு வீட்டின் மிக இன்றியமையாத பகுதிகளில் ஒன்றாக உள்ளது. 
வீட்டின் கழிவறை ஏதேனும் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டிருந்தால், அது எதிர்மறை ஆற்றலை உள்ளே அனுமதித்து விடும். வாஸ்து  கோட்பாடுகளின்படி அது ஆரோக்கியம் மற்றும் செல்வ நிலை சம்பந்தமான சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது.
 
வடமேற்கிலும், வடக்கிலும் குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள் அமைக்கலாம். டாய்லெட்டில் கம்மோடை தெற்கு - வடக்காக  அமைக்கவேண்டும்.
 
ஒருபோதும் டாய்லெட்டை வடகிழக்கில் அமைக்கவேண்டாம். ஏனென்றால் வடகிழக்கு செல்வம் வளரும் இடமாகும். கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம்.
 
பாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும். கருப்பு கலரைத் தவிர்க்கவும். குளியலறை, டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக இருக்கவேண்டும்.