வாஸ்து சாஸ்திரத்தின்படி சமையலறை எந்த திசையில் இருக்க கூடாது...?
Updated: செவ்வாய், 23 ஜூலை 2019 (16:23 IST)
எக்காரணம் கொண்டு வாஸ்து மூலைகள் ஆன ஈசானிய மூலையில் அதாவது வடகிழக்கு மூலையில் சமையலறையை அமைக்கக் கூடாது. அவ்வாறு அமைத்தால் வீட்டில் இருக்கும் செல்வங்களை எரிப்பதற்கு சமம்.
ஒரு வீட்டின் சமையல் அறை என்பது வாஸ்து படி தென்கிழக்கு திசையில் இருந்தால் சிறப்பாக இருக்கும். அதுவே அக்கினி பகவானுக்கு உகந்த திசை ஆகும். தென்கிழக்கு திசையில் சமையல் அறையை தவிர வேறு அறைகள் இருப்பது நல்லதல்ல.