உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை நாம் சிறுதானியங்கள் மூலம் பெறலாம். உடலுக்கு நலன் பயக்கும் உணவுகளில் சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. புஞ்சைத் தாவரங்களில் சிறுதானியங்களில் சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை.