1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அனைத்து பகுதிகளும் மருத்துவ குணங்கள் நிறைந்த வெப்பாலை...!!

வெப்பாலையின் இலை, பட்டை, வித்து ஆகியன மருந்தாகிப் பயன் தரவல்லது. வெப்பாலையின் விதை நீக்கிய காய்கள் சீதபேதியையும், கடுங் கழிச்சலையும் போக்க வல்லது. 
வெப்பாலையில் உள்ள வேதிப்பொருள் குருதியில் மிகுந்துள்ள கொழுப்புச் சத்தை கரைக்க வல்லது. மார்பு நோய் அல்லது இதயநோய் இதனை தொடர்ந்து வரும் இதய அடைப்பு வராது தவிர்க்க உதவுகிறது.
 
வெப்பாலை மரப்பட்டைச் சூரணம் ஓரிரு தேக்கரண்டி எடுத்து தேநீராகப் பருகுகிறபோது பாற்பெருக்கியாகவும், பல்வேறு வயிற்று நோய்களைத்  தணிப்பதாகவும் பயன் தருகிறது.
 
வெப்பாலை மரப்பட்டைச் சூரணத்தோடு 10 மிளகும் சுவைக்கென பனங்கற்கண்டும் சேர்த்து தீநீராகப் பருகும்போது, சருமநோய்களை விரைந்து குணப்படுத்துவதோடு காய்கள் எவ்விதத்தினால் ஆயினும் அதை ஆற்றும் மருந்தாகிறது. காய்ச்சலைத் தணிவிக்கிறது.
 
வெப்பாலை இலை நான்கு அல்லது ஐந்து எடுத்து அதனுடன் சம அளவு கீழாநெல்லி, நொச்சி இவைகளின் இலையைச் சேர்த்து அரைத்து, ஒரு மண்டலம் உள்ளுக்கு சாப்பிட, மாத விலக்கு ஒழுங்காவதோடு பெண் மலடு நீங்குவதற்கும் வகை செய்கிறது.
 
வெப்பாலை இலை, கிழ்க்காய் நெல்லி இலை மற்றும் ஆமணக்கு இலை ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து ஒரு நெல்லிக்காய்  அளவு விழுதோடு மோர் கலந்து அன்றாடம் காலை வெறும் வயிற்றில் பருகி வர சில நாட்களில் மஞ்சள் காமாலை மறைந்து போகும்.
 
இந்த எண்ணெயை வடித்து பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு மேற்பூச்சாகப் பூசி வர உடலில் செதில் செதிலாகக் கொட்டி அரிப்பும், துர்நாற்றமும் மன உளைச்சலும் உண்டாகக்கூடிய தோல் நோயான சொரியாஸிஸ் குணமாகும்.
 
வெப்பாலைப் பட்டையைப் பசுமையாக இடித்துச் சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு சாறுடன் பசும்பால் சேர்த்துப் பருகி வர சிறுநீரக  நோய்கள் பலவும் சீர்பெறும்.
 
வெப்பாலை விதைச் சூரணத்தை எடுத்து உடலில் வீக்கம் கண்ட இடத்தின் மேல் தேய்த்து வர வீக்கம் தணியும். வெப்பாலை விதைச் சூரணத்தை வெருகடி எடுத்து தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வர குடலில் தங்கிய புழுக்கள் நீங்கும், காய்ச்சலும் தணியும், பேதியும்  குணமாகும்.
 
வெப்பாலை இலையோடு சிறிது உப்பு சேர்த்து மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருந்து துப்பிவிட பல்வலி பற்சொத்தை குணமாகும்.