Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப தலைவிகளுக்கான பயன் தரும் வீட்டு குறிப்புகள்...!

Updated: வியாழன், 25 ஏப்ரல் 2019 (13:24 IST)
 
* பச்சை காய்கறிகளை பேப்பரில் சுற்றி, பிரிட்ஜில் வைத்தால் ‘பிரெஷ்’ஆக இருக்கும்.
 
* பாலோ, பன்னீரோ, எது போட்டாலும், கூடவே வெந்நீர் ஊற்றினால் மேலும் மென்மையாக இருக்கும். வெந்தயக்கீரை சப்பாத்தி செய்யும்போது  கூடவே, சிறிதளவு கடலை மாவு, தயிர் ஊற்றிப்  பிசைந்தால் சுவை கூடும்.
 
* பூரி செய்யும்போது சில நேரங்களில், விரிந்து வராமல் போகும். மாவில் சிறிது பால் சேர்த்துப் பிசைந்தால், பூரி நன்கு விரிந்து கொடுக்கும்.  சூடான எண்ணெயை மாவில் ஊற்றிப் பிசைந்தாலும் பூரி நன்றாக பூரித்து வரும்.
 
* மஸ்லின் துணியில் சிறிய அளவில் பைகள் தைத்து வைத்துக் கொண்டால், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றைப் போட்டு பிரிட்ஜில்  வைக்கலாம்; இலைகள் நிறம் மாறாமல் இருக்கும்.
 
* பிளாஸ்டிக் கவரில் ஒரே ஒரு துளை இட்டு, பச்சை மிளகாய்களைப் போட்டு பிரிட்ஜில் வைத்தால், மிளகாய், மாதக் கணக்கில் கெடாமல்  இருக்கும்.
 
* மிளகாய் பொடியில் வண்டு வராமல் இருக்க, சிறு துணியில் சிறிது பெருங்காயத் துண்டை வைத்து மூட்டையாகக் கட்டிப்போட்டு வைத்தால்  போதும்.
 
* பிரிட்ஜில் வைக்கப்படும் பிரெட் துண்டுகள், விரைப்பாகி விடுவதைத் தவிர்க்க, அவற்றுடன் உருளைக் கிழங்கைப் போட்டு வைப்பது நல்லது.

எல்லாம் காட்டு

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments