Daily Horoscope
✕

சில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்..!!

Updated: சனி, 22 ஜூன் 2019 (14:32 IST)
 
மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.
 
எந்த அரிசியாக இருந்தாலும் 15 நிமிடங்களுக்கு குறையாமல் ஊற வைத்து உலையில் வேகவைத்தால் அது வேகும் நேரம் குறையும்.  எரிபொருள் மிச்சமாகும்.
 
பலகாரம் செய்த பிறகு மீதமாகும் சுட்ட எண்ணெயில் வாழைக்காய், கருணைக்கிழங்கு வறுவல் செய்தால் சுவை மிகுதியாக இருக்கும்.
பாகற்காயில் உள்ள கசப்பு போக சிறிது உப்பு சேர்த்து பிசைந்து 5 நிமிடம் வைத்துவிட்டு பிறகு கழுவி விட்டு சமைத்தால் கசப்பு தன்மை  குறைவாக இருக்கும்.
 
விளக்கு போன்ற பித்தளை பாத்திரங்களை புளி சேர்த்து தேய்ப்பதற்கு பதில் எலுமிச்சை சாறை பாத்திரம் தேய்க்கும் பொடியுடன் சேர்த்து  தேய்தால் எண்ணெய் பிசுக்கள் மறைந்து பளபளப்பாக மாறிவிடும்.
 
வாழைக்காய் நறுக்கும் போது கரையாகும், இதனை தடுக்க சிறிது எண்ணெய் பூசிக்கொண்டால் கரை ஏற்படாது. பூக்களை கவரில் வைப்பதை  விட ஒரு டைட் டப்பாவில் போட்டு வைக்கலாம்.
 
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு காலையில் நேரம் கிடைப்பதில்லை, இதனால் கிழங்கு போன்றவற்றை முதல் நாள் இரவே வேகவைத்து  கொள்ளலாம்.
 
முள்ளங்கி சமைக்கும் போது லேசாக வதக்கி சமைத்தால், எளிதில் சளி பிடிக்காது.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments