ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் விஜய் சேதுபதி

Last Modified சனி, 2 ஜூன் 2018 (16:13 IST)
இதுவரை ட்விட்டரில் கணக்கு இல்லாத விஜய் சேதுபதி, தற்போது அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
சினிமா பிரபலங்கள் எல்லாருமே ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் நிலையில், விஜய் சேதுபதி மட்டும் அதில் இல்லை. ஆனால், ஃபேஸ்புக் மற்றும்  இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில், முதன்முதலாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்  விஜய் சேதுபதி.
 
காரணம், ட்விட்டரில் அவர் பெயரில் பல போலி கணக்குகள் இயங்கி வருகின்றன. அதில் போடப்படும் ட்வீட்டுகளுக்காக விஜய் சேதுபதியின் தலை உருண்டு  வருகிறது. சமீபத்தில் ரஜினிக்கு ஆதரவாக அவர் போலி கணக்கு ஒன்றில் ஒரு ட்வீட் போடப்பட்டது. அதை விஜய் சேதுபதி தான் போட்டார் என வைரலானது. இவற்றைத் தவிர்க்கவே ட்விட்டரில் இணைந்துள்ளார் விஜய் சேதுபதி.


இதில் மேலும் படிக்கவும் :