புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (07:04 IST)

ஆட்சியை கலைத்த அடுத்த நிமிடமே வேட்பாளர்களை அறிவித்த தெலுங்கானா முதல்வர்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் நேற்று தனது தலைமையிலான ஆட்சியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததுடன் ஆளுனரை சந்தித்து ஆட்சியை கலைக்கும்படி பரிந்துரை செய்தார். முதல்வரின் ராஜினாமாவை ஆளுனரும் ஏற்றுக்கொண்டதால் விரைவில் அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.

இந்த நிலையில் ஆட்சியைக் கலைத்த அடுத்த நிமிடமே மாநிலம் முழுவதும் 105 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளது. அதில் நேற்று 105 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த சந்திரசேகர ராவ், மீதமுள்ள தொகுதிகளின் வேட்பாளர் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார். இந்த 105 வேட்பாளர்களில் இரண்டு பேர் மட்டுமே புதியவர்கள் என்பதும், மற்ற அனைவரும் தற்போதைய எம்.எல்.ஏக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இறுதியில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தற்போது தெலுங்கானா மாநில அரசும் கலைக்கப்பட்டுள்ளதால் அதனுடன் சேர்த்து தெலுங்கானா சட்டசபை தேர்தலும் நடத்தப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

2019வரை தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் இருந்தாலும் தற்போது ஆட்சிக்கு நல்ல பெயர் இருப்பதால் ஆட்சியை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தக்க வைத்து கொள்ள தேர்தலை நடத்த சந்திரசேகரராவ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது