அர்ஜூன் மீது பாலியல் புகார் எழுப்பிய சுருதி ஹரிகரன், புதிய படத்தில் இருந்து நீக்கம்
நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சுருதி ஹரிகரன் போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த மனு அடிப்படையில் அர்ஜூன் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதனால் அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
இதனிடையே சுருதி ஹரிகரனை ‘தாரி தப்சித்டான் தேவ்ரு’ என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த படத்தை பி.எஸ்.லிங்கா தேவ்ரு இயக்குவார் என்றும் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறியதால் சுருதி ஹரிகரனை அந்த படத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார்கள்
இதுகுறித்து டைரக்டர் லிங்கதேவ்ரு கூறும்போது, “அர்ஜூன் மீது சுருதிஹரிகரன் வழக்கு தொடர்ந்துள்ளதால் அவர் அடிக்கடி நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டி இருக்கும். எனவே அவரை படத்தில் எங்களால் நடிக்க வைக்க முடியாது. வேறு கதாநாயகி தேடுகிறோம். மீ டூ விவகாரத்தை 4 சுவர்களுக்குள் முடிந்திருக்க வேண்டும். அது வீதிக்கு வந்து ரசிகர்கள் மோதும் நிலைக்கு மோசமாகி விட்டது” என்றார்.