1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (16:43 IST)

காவிரி வழக்கு : கமலஹாசன் பேசியாச்சு.. ரஜினி என்ன ஆச்சு?

காவிரி நதிநீர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் இதுவரை வாய் திறக்காமல் இருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

 
காவிரி வழக்கில் இன்றுஇ இறுதி தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம் 177.25 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனவும், தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 டி.எம்.சி இருப்பாதால், மீதமுள்ள 14.75 நீரையும் கர்நாடகத்திற்கே வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
 
கேட்டது கிடைக்காமல் போனதோடு, தமிழகத்திற்கு வர வேண்டிய நிரீல் 14.75 டி.எம்.சி நீர் கர்நாடகத்திற்கு சென்றுவிட்டது. இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக அரசியல் மாபெரும் தோல்வி என அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு பின்னால் அரசியல் இருப்பதாக வைகோ உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இது தமிழக அரசியல் கையாலாகாத்தனம் என திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
 
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. வாக்கு அரசியலுக்காக அரசியல்வாதிகள் தேசியத்தை மறந்து பேசுகின்றனர். வீடு பற்றி எரியும் போது பீடி பற்றவைக்கும் வாக்கு அரசியலால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்” என கருத்து தெரிவித்துள்ளார்.
 
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ளனர். ஆனால், அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவிக்கிறார். ஆனால், ரஜினியோ மயான அமைதி காக்கிறார். 
 
அரசியல் கட்சி தொடங்கிய பின்புதான் கருத்து கூறுவேன் என்பது எந்த வகையில் சரி? அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்துவிட்ட ஒருவர், இப்படி தமிழகத்தின் முக்கிய வாழ்வாதார பிரச்சனையில் அமைதி காப்பது சரியா? என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அமைதி காக்கும் ரஜினியை கிண்டலடித்து மீம்ஸ்களும் பதிவு செய்து வருகின்றனர். குறைந்தபட்சம் டிவிட்டரிலாவது அவர் கருத்து தெரிவித்திருக்கலாம் என சிலர் கூறி வருகிறார்கள்.