ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்தார் ராஜூ மகாலிங்கம்

Last Modified வியாழன், 15 பிப்ரவரி 2018 (13:52 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் பதவிக்கு முன்னாள் லைக்கா நிறுவனத்தின் செயல் அதிகாரி ராஜூமகாலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரஜினியின் அரசியல் கட்சியிலும் இவருக்கு ரஜினிக்கு அடுத்த இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள் மாவட்டந்தோறும் நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ராஜு மகாலிங்கத்தை நியமனம் செய்து ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

ராஜூமகாலிங்கம் சமீபத்தில் லைக்கா நிறுவனத்தின் செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஜினியின் மக்கள் மன்றத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கடந்த சில வாரங்களாக இவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரஜினிக்கு அவ்வப்போது முக்கிய தகவல்களை அளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லைக்காவின் '2.0' படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினியும் ராஜூமகாலிங்கமும் நெருக்கமாகிவிட்டது அனைவரும் அறிந்ததே.


இதில் மேலும் படிக்கவும் :