நிர்பயா வழக்கு: மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

திங்கள், 9 ஜூலை 2018 (15:12 IST)
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்கரம் செய்து கொலை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரிந்ததே.  ராம் சிங், முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா உள்பட ஆறு பேர் மீதான வழக்கு நடந்து கொண்டிருந்தபோது ராம்சிங் திஹார் சிறையில் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் குற்றவாளிகளில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் தண்டனை முடிந்து விடுதலையானார். 
 
இந்த நிலையில் இந்த வழக்கில் முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய 4 பேர்களுக்கும் தூக்குத் தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து நால்வரும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். டெல்லி ஐகோர்ட்டும் தண்டனையை உறுதி செய்ததை அடுத்து மீண்டும் நால்வரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
 
இந்த மனுமீதான விசாரணை முடிவடைந்து சற்றுமுன் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று அளித்த தீர்ப்பில் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை உறுதி செய்தது. இதனால் குற்றவாளிகளான நால்வருக்கும் விரைவில் தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்