Daily Horoscope
✕

இந்தியன் 2-வில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா?...

Updated: சனி, 30 ஜூன் 2018 (18:21 IST)
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2-வில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

 
ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘இந்தியன்’. கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக சுகன்யா மற்றும் மனிஷா கொய்ராலா நடித்தனர். 
 
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
 
இந்நிலையில், இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், சினிமா வட்டாரங்கள் இதை உறுதி செய்துள்ளன.

எல்லாம் காட்டு

சென்னையில் இன்று Zero Tolerance Day ... விதிமீறினால் வழக்கு!

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!.. விரைவில் அம்பாசமுத்திரம் செல்லும் விஜய்..

பணம் கொடுத்தவனையும் அரெஸ்ட் பண்ணுங்க - அன்பில் மகேஷ் கோபம்

ராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன் வெட்டிக்கொலை..

தமிழகம் முழுவதும் சட்ட ஆலோசகர்கள் - தனுஷின் அடுத்த மூவ்

அடுத்த கட்டுரையில்
Show comments