செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வெள்ளி, 23 நவம்பர் 2018 (17:03 IST)

"வாழ்க்கை ஒரு வட்டம்" அப்போ நான் கீழ நீ மேல..ஆனால் இப்போ!

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபாரமானது. சாதாரண மேடை கலைஞராக தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் தொகுப்பாளராக மாறி தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருகிறார்.
 
தற்போது சிவகார்த்திகேயனையும் நடிகர் பிரசன்னாவையும் இணைத்து சமூக வலைத்தளத்தில் ஒரு மீம் வைரலாக பரவி வருகிறது .
 
சன் லைஃப் டிவியில் ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் பிரசன்னா.
 
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இதற்கான ப்ரமோ வீடியோ, கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 20) வெளியானது.
 
அதைப் பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், 2011-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தபோது, சிறப்பு விருந்தினராக பிரசன்னா கலந்து கொண்டார். ஆனால், தற்போது (2018) பிரசன்னா நிகழ்ச்சித் தொகுப்பாளராக நிற்க, சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் என்பது போன்ற மீம்ஸை உருவாக்கி, சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்.
 
மேலும் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'கனா'. பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தின இந்தப் படத்தின் டீசர், பாடல்களைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்த அப்டேட் பற்றிய அறிவிப்பு (நவ.22) இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 
 
அதற்குப் பதிலளித்திருந்த ஒருவர், இணையத்தில் வைரலாகி வரும் சிவகார்த்திகேயன் - பிரசன்னா இருக்கும் மீமை பதிவிட்டிருந்தார்.
 
அவரைத் தொடர்ந்து, அந்த மீமுக்கு கீழே ஶ்ரீனிவாசன் என்பவர், “இதோ என் கருத்து. சிவகார்த்திகேயன் அற்புதமான தொகுப்பாளர். பிரசன்னாவுக்கு தொகுப்பாளராக அவ்வளவு திறமை இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பிரசன்னாவைத் தொகுப்பாளராகப் பார்ப்பது போரடிக்கிறது. அவர் ஒரு சுமாரான நடிகர். அதிகம் வெற்றிகள் பார்க்காதவர். சிவா, தமிழ் சினிமாவின் சிறந்த பொழுதுபோக்குக் கலைஞரில் ஒருவர்” என சீனிவாசன் என்பவர் தெரிவித்துள்ளார்.
 
அதற்குப் பதிலளித்துள்ள பிரசன்னா, “அன்புள்ள சீனி, நான் தொகுத்து வழங்குவது போரடிக்கிறது என்றால், அது அப்படியே இருக்கட்டும். அதை நான் முழுநேர வேலையாகச் செய்யப் போவதில்லை. நான் சுமாரான நடிகர் என்றால், என்னை மேம்படுத்திக்கொள்ள இடமிருக்கிறது.






















 

அடுத்ததாக என்ன சொன்னீர்கள் நான் அதிக வெற்றிகளைப் பார்க்கவில்லையா? வெற்றிபெற இன்னும் கால அவகாசம் உள்ளது. மேலும்  வெற்றியைச் சம்பாதிக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் தேவைப்படும். வெறுப்பை அன்பைச் சம்பாதிக்க ஒரு நொடி போதும். ஒருநாள் நான் உங்கள் அன்பையும் பெறுவேன்” எனத் தெரிவித்துள்ளார் நடிகர் பிரசன்னா.
 
நடிகர் பிரசன்னாவின் இந்த பதிலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தததோடு ஆறுதல் அளித்து வருகின்றனர்.