1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 28 மே 2021 (21:55 IST)

இறந்த நண்பனுக்கு இளையராஜாவின் இசை அஞ்சலி செலுத்திய நண்பர்கள் - வைரல் வீடியோ!

மலேசியாவை சேர்ந்த இசைஞானி இளையராஜாவின் ரசிகர் ஒருவர் மரணமடைந்துள்ளார். அவர் இறப்பதற்கு முன்னரே தன் நண்பர்களிடம் நான் இறந்துவிட்டால் எனக்காக அழாமல் இசையால் எனக்கு அஞ்சலி செலுத்துங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். 
 
அதன்படி நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி இறந்த தன் நண்பனின் சவப்பெட்டியின் அருகில் மாஸ்க் அணிந்தபடி நின்று அவருக்கு  ‘இளமை எனும் பூங்காற்று’ உள்ளிட்ட இளையராஜாவின் பாடல்களை பாடியபடி இசையமைத்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.